இன்றைய ராசிபலன்

பதிவிட்டவர் - Editor
இன்றைய ராசிபலன்


  • மேஷம்

    மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சோர்வு களைப்பு வந்து நீங்கும். வேலைச்சுமை அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் நேரம்  வேலை பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எளிதாக முடிய வேண்டிய சில காரியங்களைக் கூட போராடி முடிக்க வேண்டி வரும். உறவினர் நண்பர்களால் பிரச்சினைகள் வந்து செல்லும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டியநாள்.

  • மிதுனம்

    மிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். மரியாதை கூடும் நாள்.

  • கடகம்

    கடகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சியால் வெற்றி பெறும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இழுபறியாக இருந்த வேலைகள் எளிதாக முடியும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தேவைகள் பூர்த்தி ஆகும் நாள்.

  • கன்னி

    கன்னி: சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கவலைப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டிய நாள்.

  • துலாம்

    துலாம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு மனை வாங்குவது லாபகரமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

  • தனுசு

    தனுசு: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

  • மகரம்

    மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன் புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சகஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பிரபலங்களை சரியாக பயன்படுத்தி கொள்வீர்கள். அரசு காரியங்கள் வெற்றியடையும். வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். தைரியம் கூடும் நாள்.

  • மீனம்

    மீனம்:  சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தாரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவசரத்துக்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாற்றங்கள் ஏற்படும் நாள்.