Google Meet சேவையில் கணினி திரையை பகிர்வது எப்படி?

பதிவிட்டவர் - Editor
Google Meet சேவையில் கணினி திரையை பகிர்வது எப்படி?

தற்போது பல முன்னணி நிறுவனங்கள் ஒன்றுகூடல்கள் மற்றும் கலந்துரையாடல்களை வீடியோ கொன்பரன்ஸ் அப்பிளிக்கேஷன்கள் ஊடாக மேற்கொண்டுவருகின்றன.

இதற்காக Zoom அப்பிளிக்கேஷன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இதிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக Microsoft Team, Google Meet போன்ற மேலும் சில அப்பிளிக்கேஷன்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இப்படியிருக்கையில் Google Meet சேவையை பயன்படுத்தும்போது கணினி திரையினை பகிர்ந்துகொள்ள முடியும்.

இதற்கு https://meet.google.com/ எனும் இணைப்பினை முதலில் கிளிக் செய்ய வேண்டும் அல்லது iOS அல்லது அன்ரோயிட் அப்பிளிக்கேஷனை திறக்க வேண்டும்.

அதன் பின்னர் Present Now என்பதை தெரிவு செய்யவும்.

தொடர்ந்து பகிரப்படவேண்டிய திரை அல்லது கூகுள் குரோம் உலாவியின் டேப்பை தேர்வு செய்யவும்.

அதன் பின்னர் Share பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.