ஓஎல் பெறுபேறுகள் வெளியாகின

பதிவிட்டவர் - Editor

 

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதால், பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு இப்போது தபாலில் அனுப்பிவைக்கப்படாது. எனினும் பாடசாலை அதிபர்களுக்கு பெறுபேறுகள் இணையத்தில் (ஒன்லைன்) கிடைக்கும்.

மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு இணையம் ஊடாக பெறுபேகளை அனுப்பிவைக்கப்படும்.

அத்துடன், மாணவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான  https://doenets.lk/examresults முகவரிக்குச் சென்று தமது பெறுபேற்றைப் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.