இன்றைய ராசிபலன்

பதிவிட்டவர் - Editor
இன்றைய ராசிபலன்


  • மேஷம்

    மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  தொட்டது துலங்கும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரசெலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.  உழைப்பால் உயரும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள்.  பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

  • கன்னி

    கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த  பொருட்கள்  வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். நிம்மதியான நாள்.

  • துலாம்

    துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டும் முடிக்க வேண்டியிருக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் சங்கடங்கள் உண்டாகும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

  • தனுசு

    தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.

  • மகரம்

    மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள் பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள் உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தாரின் எண்ணங் களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்சனைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களால் அன்புத்தொல்லைகள் உண்டு. முன்கோபத்
    தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டு பிடிப் பது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்