சூறாவளி காற்றால் தரைமட்டமான வீடுகள்

பதிவிட்டவர் - Editor
சூறாவளி காற்றால் தரைமட்டமான வீடுகள்


பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு (Vanuatu) தீவில், சூறாவளி காற்று பலமாக வீசி வருவதால், அங்கு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

மணிக்கு 235 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் சூறாவளி காற்றால், அந்நாட்டு தலைநகர் போர்ட் விலாவில், தகவல் தொடர்பு முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் தலைநகருக்கு செல்லும் சாலைகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டுள்ளதால், வான்வெளி வாயிலாக நிவாரணம் வழங்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்