மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டவர் உயிரிழப்பு; கோரோனா தொற்று பரிசோதனை செய்ய நடவடிக்கை

பதிவிட்டவர் - Editor
மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டவர் உயிரிழப்பு; கோரோனா தொற்று பரிசோதனை செய்ய நடவடிக்கை

கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு கோரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவர் ஆஸ்துமா நோயாளி. கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது” என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் மந்திகை வைத்தியசாலை பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது.