சகோதரிக்கு ட்ரோன் மூலம் டாய்லெட் பேப்பர் அனுப்பி வைத்த நபர்

பதிவிட்டவர் - Editor
சகோதரிக்கு ட்ரோன் மூலம் டாய்லெட் பேப்பர் அனுப்பி வைத்த நபர்

இங்கிலாந்தில் பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர், தனது சகோதரிக்கு ட்ரோன் மூலமாக டாய்லெட் பேப்பர் அனுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் நேரடி தொடர்பை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதை நகைச்சுவையாக கையாளும் வகையில் நார்தாம்ப்டன்ஷையரில்(Northamptonshire) பீட் பார்மர் என்பவர், 2 தெரு தள்ளி வசித்து வரும் தனது சகோதரிக்கு அவர் கேட்ட டாய்லெட் பேப்பரை ட்ரோன் மூலம் அனுப்பி வைத்தார்