இன்றைய ராசிபலன்

பதிவிட்டவர் - Editor
இன்றைய ராசிபலன்


  • மேஷம்

    மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டே இருக்கும். கண், கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தி யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல் லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப் பீர்கள். போராடி வெல்லும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். நல்லன நடக்கும் நாள்

  • கடகம்

    கடகம்: அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். புகழ் கூடும் நாள்

  • சிம்மம்

    சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயரதி காரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: சந்திராஷ்டமம்  தொடர்வதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண் டாம். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித்தவிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களிடம் கனிவாக பழகுங்கள். உடல்நலம் பாதிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் குறை கூறுவார்கள். நம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • துலாம்

    துலாம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றி யடையும். பழைய நண்பர்கள் தேடிவருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தி யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். வெற்றி பெறும் நாள்.

  • தனுசு

    தனுசு: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி  உத்தியோகம் குறித்துயோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

  • மகரம்

    மகரம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரு டன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். நட்பு வட்டம் விரியும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் வேலைக்கு புகழ் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்

  • கும்பம்

    கும்பம்: தைரியமாக சில முக் கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைக ளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சியால் முன்னேறும் நாள்.

  • மீனம்

    மீனம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். மகிழ்ச்சியான சூழல் உருவாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்