3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா தற்போது கண்டுபிடிப்பு

பதிவிட்டவர் - Editor
3 ஆண்டுகளாக பூமியை வலம் வரும் குட்டி நிலா தற்போது கண்டுபிடிப்பு

மூன்று ஆண்டுகளாக பூமியை ஒரு குட்டி நிலா சுற்றி வருவது தற்போது கண்டறியபட்டுள்ளது.

பூமியை ஒரு புதிய குட்டி நிலவு கடந்த மூன்று ஆண்டுகளாக சுற்றி வலம் வருவதை கேம்பிரிட்ஜ் “ மைனர் பிளானட் சென்டர் “ ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தென்படாமல் இருந்த குட்டி நிலாவை தற்போது கண்டறிந்து அதற்கு “2020 சிடி” என்ற பெயரிட்டுள்ளனர்.

image

வளிமண்டலத்தை சுற்றி வரும் குட்டி நிலாவானது பூமியை மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகமே உள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த நிலவானது மிகவும் சிறியதாக இருப்பதால் தரையை அடைவதற்குள் வளிமண்டலத்திலேயே எரிந்து விடும் என்றனர். இது மாதிரியான நிகழ்வுகள் 1991 ம் ஆண்டு “ 1991 சிடி “ என பெயரிடபட்டுள்ள கோளும், 2006- ம் ஆண்டு இது மாதிரியான விண்கல்லும் சில வருடங்கள் பூமியை சுற்றி வந்துள்ள நிலையில் பின்னர் தன் சுற்று வட்டபாதையிலேயே சென்றுவிட்டது.

image
சூரியன், சந்திரன் மற்றும் பூமி போன்ற கோள்களின் பார்வை இந்த நிலவின் மீது இருப்பதால் நிலவானது பூமியை சில சுற்றுகள் சுற்றிவிட்டு சூரியனை நோக்கி சென்றடைந்துவிடும். மேலும் இந்த குட்டி நிலவானது நீண்ட காலத்திற்கு இல்லாமல் பூமியின் பாதையிலிருந்து விலகிவிடும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தங்களது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்