மிஷ்கின் இல்லையென்றால் என்ன? நான் டைரக்ட் செய்கிறேன்..!

பதிவிட்டவர் - Editor
மிஷ்கின் இல்லையென்றால் என்ன? நான் டைரக்ட் செய்கிறேன்..!

துப்பறிவாளன் - 2 படத்திலிருந்து இயக்குநர் மிஷ்கின் விலகியுள்ள நிலையில், படத்தை நடிகர் விஷாலே இயக்கவுள்ளார்.

துப்பறிவாளன் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து, அதன் 2ம் பாகம் தயாராகி வந்தது. முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்த நிலையில், மீதமுள்ள காட்சிகளை படமாக்க ஒப்பந்தத்தில் பேசிய பட்ஜெட்டை விட கூடுதலாக 40 கோடி ரூபாயை இயக்குநர் மிஷ்கின் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதமுள்ள காட்சிகளை விஷாலே இயக்கவிருப்பதாக வெளியான செய்திகளை அவரும் உறுதி செய்துள்ளார்.

அதே சமயம் இது குறித்து விளக்கமளித்த மிஷ்கின், தான் 40 கோடி கேட்கவில்லை என்றும், கிளைமாக்சில் விஷால் சாட்டிலைட்டில் இருந்து குதிப்பது போன்ற காட்சியை படமாக்க, 400 கோடி கேட்டதாகவும் கிண்டலாக தெரிவித்துள்ளார்.