உலக கோப்பை போட்டியில் வெற்றியை தொடருமா இந்திய அணி..? இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது

பதிவிட்டவர் - Editor
உலக கோப்பை போட்டியில் வெற்றியை தொடருமா இந்திய அணி..? இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது

மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

10 அணிகள் இடம்பெற்றுள்ள இப்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஏ- பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை சந்தித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், பெர்த்தில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை சந்திக்கிறது.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதால் கூடுதல் உத்வேகம் அடைந்துள்ள இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிராக ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை மோதிய 11 ஆட்டங்களில், 9-ல் இந்தியாவும், 2-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.