சுன்னாகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்களே பலி: வாகனத்திற்குள் தீயில் கருகிய நிலையில் 2 சடலங்கள்!

பதிவிட்டவர் - Editor
சுன்னாகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்களே பலி: வாகனத்திற்குள் தீயில் கருகிய நிலையில் 2 சடலங்கள்!

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது . ஓமந்தை , பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று மாலை இலங்கை போக்குவரத்துசபை பேருந்தும் , டிப்பெண்டர் ரக வாகனமும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்திருந்தனர் . 23 பேர் காயமடைந்திருந்தனர் . விபத்தையடுத்து , ஆத்திரமடைந்த பொதுமக்கள் இ . போ . ச பேருந்திற்கு தீ வைத்தனர் . 

இதன்போது , வாகனத்திற்குள் சிக்கியிருந்த டிப்பெண்டர் சாரதியும் கருகியுள்ளார் . தீ மூட்டும் போது , அவர் உயிரிழந்த நிலையில் இருந்தாரா அல்லது மயக்கமடைந்து இருந்தாரா என்பது தெரியவில்லை .இதேவேளை , டிப்பெண்டர் வாகனத்திற்குள் தீயில் கருகிய நிலையில் இன்னொரு சடலமும் மீட்கப்பட்டது . அந்த சடலம் அடையாளம் காணப்படவில்லை .

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது . சுன்னாத்தில் இருந்து கொழும்பிற்கு டிபெண்டர் வாகனத்தில் சென்ற குடும்பமே விபத்தில் சிக்கியுள்ளது . இதில் வாகன சாரதி தவிர்ந்து ,ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர் .


 அந்த குடும்பத்தை சேர்ந்த மகள் ஆபத்தான நிலையில் , வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . வாகனத்திற்கு தீ வைத்த சந்தேகத்தில் பொலிசாரால் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்