விபத்துக்குள்ளான நிலையில் குற்றுயிராக கிடந்த வான் சாரதி தீயில் எரிந்து பலி..!

பதிவிட்டவர் - Editor
விபத்துக்குள்ளான நிலையில் குற்றுயிராக கிடந்த வான் சாரதி தீயில் எரிந்து பலி..!

வவுனியா- பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இ.போ.ச பேருந்தும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விப த்துக்குள்ளான சம்பவத்தில் வான் சாரதி விபத்துக் குள்ளான வானில் குற்றுயிராக கிடந்த சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் 25 பேர் படுகாயமடைந்துள்ளது டன் 5 பேர் பலியாகியுள்ளனர். விபத்து இடம்பெற்றதன் பின்னர் பஸ்ஸிற்கு அங்கிருந்த சிலரால் தீ வைக்கப்பட்ட நிலையில் வானிலும் தீ மூண்டு அந்த தீயில் அகப்பட்டு வான் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.