ராஜாவின் அதிரடி ஆட்டம் சம்பியனாகியது கலட்டி ஐக்கிய

பதிவிட்டவர் - Editor
ராஜாவின் அதிரடி ஆட்டம் சம்பியனாகியது கலட்டி ஐக்கிய


ராஜா மற்றும் தர்சனின் கோல்களால் கலட்டி ஐக்கிய விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

குஞ்சர்கடை கொலின்ஸ் விளையாட்டு கழகம் வடமராட்சி லீக் மற்றும் பருத்தித்துறை லீக் கழகங்களுக்கு இடையிலான 35 வயதிற்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த கழக மைதானத்தில் நடைபெற்றது..இறுதியாட்டத்தில் கலட்டி ஐக்கிய அணியை வல்வை அணி மோதியது.

முதல் பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் கலட்டி ஐக்கிய அணி வீரர் ராஜா 11வது நிமிடத்தில் ஒரு கோலைப் பதிவு செய்ய முதல் பாதியாட்டத்தில் கலட்டி ஐக்கிய அணி 1:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

இரண்டாவது பாதியாட்டத்தில் கலட்டி ஐக்கிய அணியின் ஆட்டம் மேலோங்கியது. இதில் 12வது நிமிடத்தில் ராஜா,  16 வது நிமிடத்தில் தர்சன் ஆகியோர் அடுத்தடுத்து கோலைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடிவில் கலட்டி ஐக்கிய அணி 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

ஆட்ட நாயகனாக கலட்டி ஐக்கிய அணி வீரர் பேரின்பராஜ், தொடர் ஆட்ட நாயகனாக கலட்டி ஐக்கிய அணி வீரர் ராஜா,  சிறந்த கோல் காப்பாளராக கலட்டி ஐக்கிய அணி வீரர் பாலா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

கொலின்ஸ் விளையாட்டு கழக தலைவர் ஜெ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கொலின்ஸ் விளையாட்டு கழக முன்னாள் உதைபந்தாட்ட வீரர் சி.காண்டீபன்,  சிறப்பு விருந்தினராக கொலின்ஸ் விளையாட்டு கழக முன்னாள் உதைபந்தாட்ட, கிரிக்கெட் வீரர் பா.பிரதீப்குமார்,  கெளரவ விருந்தினர்களாக கொலின்ஸ் விளையாட்டு கழக நலன் விரும்பிகளும் உதைபந்தாட்ட வீரர்களுமான க.தவேந்திரராஜா, சி.வசந்தகுமார்,  கா.பிரகாஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.