யாழ்.நகர நகைக் கடை உரிமையாளரின் கார் மோதி குடும்பத்தலைவர் சாவு – கொக்குவிலில் சம்பவம்

பதிவிட்டவர் - Editor
யாழ்.நகர நகைக் கடை உரிமையாளரின் கார் மோதி குடும்பத்தலைவர் சாவு – கொக்குவிலில் சம்பவம்

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் ஒருவரை பின்னால் பயணித்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் கொக்குவில் சந்திக்கு அண்மையாக இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் 45 வயதுடைய குடும்பத் தலைவர் ஒருவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்றதையடுத்து காரைச் செலுத்திச் சென்ற யாழ்.நகரில் பிரபல நகைக் கடை உரிமையாளர், வாகனத்தை சம்பவ இடத்தில் கைவிட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.