நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு

பதிவிட்டவர் - Editor
நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் 7 பேர் உயிரிழப்பு

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரான் எல்லையையொட்டிய தென்கிழக்கு துருக்கியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

துருக்கியின் 43 கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நில அதிர்வு, ஈரானின் ஒரு சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்