கங்குலியை முந்தி கோலி சாதனை..!

பதிவிட்டவர் - Editor
கங்குலியை முந்தி கோலி சாதனை..!

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலியை கேப்டன் விராட் கோலி முந்தி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

இதன் 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய கோலி, 11 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் போட்டிகளில் 7,212 ரன்கள் குவித்து இந்திய அளவில் அதிக ரன் அடித்த 6ஆவது வீரராக திகழ்ந்த கங்குலியின் சாதனையை தகர்த்தார். 15 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்