ஓமந்தையில் பஸ் – கார் விபத்தில் நால்வர் சாவு; வீடியோகாட்சி பஸ் தீயிட்டு எரிப்பு – பதற்றத்தை தணிக்க பொலிஸ், எஸ்.ரி.எவ் குவிப்பு

பதிவிட்டவர் - Editor

வவுனியா ஓமந்தையில் பேருந்து – கார் மோதிக்கொண்ட விபத்தில் நால்வர் உயிரிழந்தனர். சம்பவத்தையடுத்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியது. அதில் பயணித்த 20 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் 4 அம்புலன்ஸ்களில் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் சாரதியின் இருக்கைக்கு அருகில் தீப் பிடித்தாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய சொகுசுக் காரும் தீயில் எரிந்துள்ளது.

வாகனங்களின் தீ தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இன்று (23.02.2020) 6.30 மணியளவில் பேருந்தும் வானும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஐவர் ஸ்தலத்திலேயே உ யிரிழந்துள்ளனர். அத்துடன் 19 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஜீப் ரக வாகனமும் வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தார்கள் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் ம ரணமடைந்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்தவர்களால் ஜீப் மற்றும் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட அவை தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணத்தை மேற்கொண்ட மக்களின் உடமைகளும் தீயில் எரிந்துள்ளன.

தீப்பற்றிய வாகனங்களை வவுனியா நகரசபை தீயணைப்பு படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அதுபயனளிக்கவில்லை. ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.