IndVsNz முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்த் அணி முன்னிலை

பதிவிட்டவர் - Editor
IndVsNz முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்த் அணி முன்னிலை

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்த் அணி 51 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. வெல்லிங்டனில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் இந்தியா எடுத்திருந்தது.

பின்னர் இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, மேலும் 43 ரன்களை சேர்த்து 165 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்த் அணி தரப்பில் அதிகப்பட்சமாக சவுத்தியும், ஜேமிசனும் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்த் வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் வில்லியம்சன் 89 ரன்களும், டெய்லர் 44 ரன்களும் சேர்க்க, 2ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்களை நியூசிலாந்த் எடுத்திருந்தது