கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி

பதிவிட்டவர் - Editor
கார்த்திகை மாத முக்கிய விரத நாட்கள் : கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவார விரதம், பைரவாஷ்டமி

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பி வழியும். தினந்தோறும் தீபம் ஏற்றி வழிபடலாம். திருக்கார்த்திகை தீபம், கால பைரவாஷ்டமி, கார்த்திகை சோம வார விரதம் உள்ளிட்ட பல முக்கிய விரத தினங்கள் உள்ளன. முக்கிய முகூர்த்த தினங்களும் உள்ளன. விரத நாட்களை உங்க டைரியில நோட் பண்ணிக்கங்க.

கார்த்திகை 1 நவம்பர் 17 ஞாயிறு கிழமை விஷ்ணுபதி புண்ணிய காலம். முடவன் முழுக்கு காவிரியில் நீராட சகல தோஷங்களும் நீங்கும்.

கார்த்திகை 3 நவம்பர் 19 செவ்வாய் கிழமை கால பைரவாஷ்டமி. காலபைரவரை வணங்கி வழிபட நன்மைகள் நடைபெறும்.

வாஸ்து நாள் கார்த்திகை 8 நவம்பர் 24 ஞாயிறுகிழமை வாஸ்து நேரம் காலை 11.14 முதல் 11.50 வரை. வாஸ்து பூஜை செய்ய நல்ல நாள்.

கார்த்திகை சோமவார நாட்கள் 2,9,16,23,30 ஆகிய நாட்களில் சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வதை பார்க்க தரிசனம் செய்யலாம்.

கார்த்திகை 24 டிசம்பர் 10 திருவண்ணாமைலை திருக்கார்த்திகை தீப திருநாள். அதிகாலையில் பரணி தீபம் ஏற்றுவார்கள். மாலையில் மலை மீது மகா தீபம் ஏற்றலாம்.

முக்கிய முகூர்த்த நாட்கள்:

கார்த்திகை 6 நவம்பர் 22, 2019 வெள்ளிக்கிழமை தசமி திதி உத்திரம் நட்சத்திரம் சித்த யோகம் காலை 6-7.30 விருச்சிக லக்னம்

கார்த்திகை 12 நவம்பர் 28, 2019 வியாழன் கிழமை துவிதியை திதி மூலம் நட்சத்திரம் சித்த யோகம் காலை 8 -9.30 தனுசு லக்னம்

கார்த்திகை 15 டிசம்பர் 01, 2019 ஞாயிறு கிழமை பஞ்சமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 7.30 -9.30 தனுசு லக்னம்

கார்த்திகை 16 டிசம்பர் 02, 2019 திங்கட் கிழமை சஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம் அமிர்த யோகம் காலை 9.30 – 10.30 மகர லக்னம்

கார்த்திகை 20 டிசம்பர் 06, 2019 வெள்ளி கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்த யோகம் காலை 8.00 – 09.00 தனுசு லக்னம்

கார்த்திகை 22 டிசம்பர் 08, 2019 ஞாயிறு கிழமை துவாதசி திதி அசுவினி நட்சத்திரம் சித்த யோகம் காலை 9.00 – 10.00 மகரம் லக்னம்

Share this: