கிரிக்கெட்டில் 3 வித ஆட்டங்களிலும் கோலியே சிறந்த வீரர்: வில்லியம்சன்

பதிவிட்டவர் - Editor
கிரிக்கெட்டில் 3 வித ஆட்டங்களிலும் கோலியே சிறந்த வீரர்: வில்லியம்சன்

உலக கிரிக்கெட்டில் 3 விதமான ஆட்டங்களிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலியே மிகச்சிறந்த வீரர் என்று நியூசிலாந்த் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 

வெல்லிங்டனில் நாளை இந்தியா, நியூசிலாந்த் அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள வில்லியம்சன், ஒருநாள், டெஸ்ட், 20 ஓவர் ஆகிய 3 விதமான ஆட்டங்களிலும் சந்தேகமின்றி கோலிதான் தற்போது மிகச்சிறந்த வீரராக திகழ்கிறார் என்றார்.

இந்திய அணி தற்போது சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பந்துவீச்சாளர்களை ஒருங்கே கொண்டுள்ளதாகவும், அதனால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் வில்லியம்சன் புகழ்ந்தார்