ரஜினிகாந்த் பங்கேற்ற இன்டு தி வைல்ட் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

பதிவிட்டவர் - Editor
ரஜினிகாந்த் பங்கேற்ற இன்டு தி வைல்ட் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

டிஸ்கவரி தொலைக்காட்சியில் நடிகர் ரஜினிகாந்த் தோன்றும் இன்டு த வைல்ட் (into the wild) நிகழ்ச்சியின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகம் மற்றும் தேசிய பூங்காவில் டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், ரஜினி ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்நிகழ்ச்சியின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார். அதன்கீழ் உலகில் பல நாயகர்களுடன் தாம் பணிபுரிந்துள்ளதாகவும், அதில் ரஜினிகாந்துடன் பணியாற்றியது தனி சிறப்பு வாய்ந்தது என்றும் பதிவிட்டுள்ளார். அக்காட்சியில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது