கமல்ஹாசனின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் என் வாழ்வில் திருப்புமுனை" - ராணி முகர்ஜி

பதிவிட்டவர் - Editor
கமல்ஹாசனின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் என் வாழ்வில் திருப்புமுனை


நடிகர் கமல்ஹாசனின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், தமக்கு தாழ்வு மனப்பான்மையில் இருந்து மீள, பெரும் ஊக்கமாக அமைந்திருப்பதாக, நடிகை ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

"ஹேராம்" திரைப்படம் வெளியாகி இன்றோடு, 20 ஆண்டுகள் ஆகின்றன. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த ராணி முகர்ஜி, அவருடனான, அனுபவங்கள் குறித்து மனந்திறந்துள்ளார். உடல் உயரம் குறித்த தாழ்வு மனப்பான்மை தமக்கு இருந்ததால், ஹைஹீல்ஸ் போன்ற செருப்புகளை அணிவதை வழக்கமாக கொண்டிருந்ததாக ராணி முகர்ஜி கூறியுள்ளார்.

இதைக் கண்ட கமல்ஹாசன், உயரம் குறித்த தாழ்வு மனப்பான்மை தவறு என அறிவுரை கூறியதாக தெரிவித்துள்ளார். சாதனைகளும், உழைப்பும் தான் உயரத்தை பற்றி பேச வேண்டும் என்றும், உடல் உயரம் அல்ல என்றும் கமல்ஹாசன் அன்று தெரிவித்த நம்பிக்கை வார்த்தை, இன்றுவரை தமக்கு ஊக்கமளித்து வருவதாக ராணி முகர்ஜி கூறியுள்ளார்