கொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...

பதிவிட்டவர் - Editor
கொரோனாவை தடுக்கும் வாய்ப்புகளை தவறவிட்ட சீனா...

கொரோனா வைரஸ் பற்றியும், அதனை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் சர்வதேச அமைப்புகள் சீனாவிடம் நான்குமுறை எச்சரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் வூகான் நகரில் டிசம்பர் 8ஆம் தேதி கொரானா வைரஸ் உருவெடுத்ததாக சீன மருத்துவர்களே, டிசம்பர் 12ஆம் தேதி உறுதிப்படுத்தியிருக்கின்றனர். நோயாளி ஒருவருக்கு ஏற்பட்ட கடுமையான காய்ச்சலை அறிகுறியாக கொண்டு இதனை சீன மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், மிகவும் அசட்டையாக இருந்த சீன சுகாதாரத்துறை, மற்றும் அதன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் டிசம்பர் 26ஆம் தேதி தான், அது சார்ஸ் போன்றதொரு வைரஸ் என ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து, டிசம்பர் இறுதியில், அது "கொரானா வைரஸ்" என உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியது. ஜனவரி மூன்றாம் தேதி, கொரானா, ஒரு மனிதரிடமிருந்து, மற்றொரு மனிதருக்கு பரவும் என பன்னாட்டு அறிவியல் அமைப்புகள் எடுத்துக்கூறின.

ஜனவரி மாதம் 20ஆம் தேதிதான், அந்த நோய்தொற்று, "கொரானா வைரஸ்" என சீன அரசு ஒப்புக் கொண்டது.

சீனப் புத்தாண்டையொட்டி, கடந்த மாதம் 18ஆம் தேதி, 40 ஆயிரம் பேருக்கு, ஊகான் நிர்வாகம் விருந்து வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரிடம் கேள்வி எழுப்பியபோது மனிதரிடமிருந்து, மனிதருக்கு பரவும் என்பது பற்றி பின்னரே தெரியவந்ததாகக் கூறினார். அப்போதுகூட தாங்கள் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதை ஒப்புக் கொள்ளவில்லை.

சொந்த நாட்டு மக்களின் தொடர் உயிரிழப்புக்கு காரணமாகிவிட்ட சீன அரசு, தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டு தாக்கத்தை மூடி மறைப்பதிலேயே குறியாக இருந்ததாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது