27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு கிடைத்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டம்

பதிவிட்டவர் - Editor
27 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு கிடைத்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பட்டம்ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார்.

முன்னதாக அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அஜாமத் குஸ்துபயேவை சந்தித்த சுனில் குமார் 12-8 என்ற புள்ளி கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.இந்நிலையில் டெல்லியிலுள்ள கே.டி. ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் கிர்கிஸ்தான் வீரர் அசாத் சாலிடிநோவை சந்தித்த சுனில்குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் அவரை தோற்கடித்தார்.

கடந்த 1993ம் ஆண்டு பப்பு யாதவ் என்பவர் ஆசிய சாம்பியின்ஷிப் மல்யுத்தப்போட்டியில் பட்டம் வென்ற நிலையில், அதன் பின்பு சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்பு இந்த விருதை தற்போது சுனில் குமார் தட்டி சென்றுள்ளார்