13 வயது சிறுவன் கொரோனாவுக்கு பலி ... சிறார்களை தாக்காது என்ற கருத்து தகர்கிறதா ?

பதிவிட்டவர் - Editor
13 வயது சிறுவன் கொரோனாவுக்கு பலி ... சிறார்களை தாக்காது என்ற கருத்து தகர்கிறதா ?

கொரோனா வைரஸ் சிறார்கள்அதிகம் தாக்காது என எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டனில் 13 வயது சிறுவன் அதற்கு பலியாகியுள்ளான்.

இந்த சிறுவன் கொரோனா அறிகுறியான சுவாச பிரச்சனையுடன் லண்டன் கிங்க்ஸ் காலேஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்த சிறுவன் பிரிட்டனில் கொரானாவுக்கு பலியான மிகவும் வயது குறைந்த நோயாளி  என்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், வயதானவர்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற கருத்து தகர்ந்து விட்டதாக கூறியுள்ளனர்.

நேற்று பெல்ஜியத்தில்  உயிரிழந்த 12 வயது சிறுமி, ஐரோப்பாவில் கொரோனாவுக்கு பலியான வயது குறைந்த நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது

instagram takipi satn al