ஒலிம்பிக் தொடங்க 479 நாள்கள் இருப்பதை குறிக்கும் வகையில் டோக்கியோ கடிகாரத்தில் நேரம் மாற்றம்

பதிவிட்டவர் - Editor
ஒலிம்பிக் தொடங்க 479 நாள்கள் இருப்பதை குறிக்கும் வகையில் டோக்கியோ கடிகாரத்தில் நேரம் மாற்றம்

ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, போட்டி தொடங்க 479 நாள்கள் இருப்பதை குறிக்கும் வகையில் டோக்கியோவில் இருக்கும் முக்கிய கவுன்டவுன் கடிகாரத்தில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி தொடங்க இருந்த ஒலிம்பிக் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அந்தப் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஒலிம்பிக் தொடங்க இன்னும் 479 நாள்கள் இருப்பதை குறிக்கும் வகையில், டோக்கியோ ரயில் நிலைய முன்பகுதியில் உள்ள கவுன்டவுன் கடிகாரத்தில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

instagram takipi satn al